நவகைலாயங்களில் மிக முக்கியத்தலமாக விளங்குவது வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு சிவகாமி அம்பாள் சமேத கைலாசநாதர் ஆலயம். இந்த ஆலயத்தில் 12 வருடங்களுக்கு பிறகு திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளது.
இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்றைய தினம் ஆலய வளாகத்தில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தூத்துக்குடி பட்டர் செல்வம், அரசு ஒப்பந்ததாரர் பாலகிருஷ்ணன் மற்றும் முறப்பநாடு கோவில்பத்து கிராம மக்கள் மற்றும் முறப்பநாடு கிராமத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.


