மும்பை தினகரன் நாளிதழில் ஆசிரியர் இராபர்ட் அமல்ராஜ்(48). இவர் தென்காசி அருகே உள்ள கொட்டாகுளத்தினை சேர்ந்தவர். இவர் மும்பையில் இருந்து வெளிவந்த மும்பை தமிழ் டைம்ஸ் என்னும் நாளிதழில் ஆசிரியராக பணிபுரிந்தார். அதன் பின் தினகரன் நாளிதழில் மும்பையில் தொடங்கிய பின் அதன் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் சிறிது காலத்துக்கு முன்பு நோய்வாய் பட்டார். அவருக்கு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிசிச்சை பலனளிக்காமல் நேற்று(23ந்தேதி) இரவு இறந்து விட்டார். இவரது உடல் சொந்த ஊரான தென்காசி அருகே உள்ள கொட்டாக்குளத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இவர் உடலுக்கு ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு கல்லறை தோட்டத்தில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


