மக்காச்சோள படைப்புழுக கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவாசயிகளுக்கு வேளாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாய பெருமக்களுக்கு கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.
கருங்குளம் வட்டாரத்தில் மக்காச்சோளம் பயிர் அதிகளவில் பயிரிடப்படுகின்றது. மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை தக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. அதன் அடிப்படையில் விவசாயிகள் கோடை உழவு செய்து ஒரு ஏக்கருக்கு வேப்பம் புண்ணாக்கு 100 கிலோ இட வேண்டும். அதன் பின்பு பிவேரியா பேசியானா பாக்டீரிய கொல்லி கொண்டு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். பியர் இடைவெளியானது மானாவாரிக்கு வரிசைக்கு வரிசை 45 செமீ செடிக்கு செடி 20 செமீ என இடைவெளி கடைபிடிக்கவேண்டும். படைப்புழுவை கட்டுப்படுத்த 15 லிருந்து 20 நாள்களுக்கு மக்காச் சோளம் பயிருக்கு அசாடிராக்டின் ஒரு சதவீதம் இசி 20 மிலி அல்லது தயோடிகார்ப்ப 75 (டிபிள்யூ பி) 20 கிராம் அல்லது எமாமெக்டின்பென்சோயேட் 4கிராம் என்ற அளவில் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு பயிர்களில் நன்குபடும் படி தெளித்து படைப்புழுவினை கட்டுப்படுத்தலாம்.
மேலும் 40 முதல் 45 நாட்கள் மக்காச்சோளம் பயிருக்கு ஸ்பெனிடோர்ம் 12 எஸ்.சி. மி.லி.அல்லது மெட்டாரைசியம் அனிசோபிலே 80 கிராமம் அல்லது புளூபெண்டிமைடு 480 எஸ்.சி. 4 மி.லி. அல்லது குளோரோடிரினிபுரோல் 18.5 எஸ்.சி. 4 மி.லி என்ற அளவில் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு பயிர்களில் தெளித்து படைப்புழுவினை கட்டுப்படுத்தலாம். மேலும் வயல்களில் வரப்பு பயிர்களாக துவரை, சூரிய காந்தி, தட்டைப்பயறு சோளம் போன்ற பயிர்களை விதைத்து நன்மை செய்யும் பூச்சிகளை அதிகாரித்தும் படைப்புழுவினை கட்டுப்படுத்தலாம். வயல்களின் நடுவில் பறவை தாங்கிகள் அமைத்தும் விளக்குப் பொறி 1 எண் மற்றும் இனக்கவர்சசி பொறிகள் ஏக்கருக்கு 20 எண்கள் வீதம் வைத்து படைப்புழுவினை கட்டுப்படத்தி மக்காச்சோளம் பயிரில் அதிக மகசூல் பெற்றிடுமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் தெரிவித்துள்ளார்.
&&&


