உலக நாகரீகத்தின் தொட்டில் என ஆதிச்சநல்லூர் அழைக்கப்படுகிறது. இந்த ஆதிச்சநல்லூரில் கடந்த 25ம் தேதி அகழாய்வு பணியானது துவங்கியது. இதற்கிடையில் 114 ஏக்கரிலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறையினர் இந்த இடத்துக்குள் சிறு குழியை தோண்ட கூட அனுமதிக்காமல் த¬ ட விதித்து இருந்தனர். இதற்கிடையில் கால்வாய் பஞ்சாயத்தினை சேர்ந்த வீரளபேரியை சேர்ந்தவர் பாப்பாத்தி(98). இவர் நேற்று வயது முதிர்ந்த காரணத்தினால் இறந்தார். வீரளபேரியை சேர்ந்தவர்களை அடக்கம் செய்யும் பரம்பு பகுதியினை தற்போது மத்திய தொல்லியல் துறையினர் வேலியிட்டு அடைத்துவிட்டனர். ஆனாலும் வீரளபேரியை சேர்ந்த மக்கள் தாங்கள் எப்போது அடக்கம் செய்யும் இடத்தில் பாப்பாத்தியை அடக்கம் செய்ய குழி தோண்டினர். இது குறித்து தகவல் கிடைத்த வுடன் மத்திய தொல்லியல் துறையினர் செய்துங்கநல்லூர் போலிசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு ஸ்ரீவைகுண்டம் துணை தாசில்தார் சங்கரநாரயணன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் அய்யனார், வருவாய் ஆய்வாளர் இருதயமேரி, கால்வாய் கிராம நிர்வாகஅதிகாரி தேன்மொழி, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ் குமார், ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், செய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி உள்பட போலிசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் பாப்பாத்தியம்மாள் மகன்கள் கோபால், நயினார், பேரன் வழக்கறிஞர் ஜெகன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக கருங்குளம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சீனி ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை முடிவில் வீரளபேரி இடுகாட்டுக்கு வேறு இடம் ஓதுக்கப்பட்டு, அந்த இடத்தில் பாப்பாத்தியை புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


