தூத்துக்குடி மாவட்டம் திமுக தெற்கு கருங்குளம் ஒன்றியம் திமுக(தெற்கு)-கருங்குளம் மத்தியக் கிளை பகுதியில் கொரோனா ஊரடங்கு உத்தரவின் காரணமாக அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய பொதுமக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த ஒன்றினைவோம் வா திட்டத்தின் மூலம் கனிமொழி எம்.பி 52 ஏழை எளிய பொது மக்களுக்கு அரிசி பருப்பு உள்பட நிவாரணப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்தார்.
கருங்குளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் இசக்கிப்பாண்டியன் (பொறுப்பு), கருங்குளம் திமுக மத்திய கிளை அவைத் தலைவர் ச.உடையார், மத்திய கிளை திமுக செயலாளர் பீ.ஜாபர் சாதிக், மத்திய திமுக கிளை பொருளாளர் சு.பரமசிவன், ஒன்றிய பிரதிநிதிகள் வெங்கடேஷ், மல்லிகா சின்னத்துரை, மத்தியக் கிளை துணைச் செயலாளர் சீதா கணேசன், செயற்குழு உறப்பினர்கள் சு.வேல்முருகன், திருமலை ராகவன் உ.இ.பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டு ஏழை எளிய மககளுக்கு உதவியை வழங்கினர்.


