செய்துங்கநல்லூர் அருகில் உள்ள அய்யனார்குளம் பட்டியில் கிறிஸ்தவ நற்பணி சங்கத்தினர் கொரானா நிவாரண பொருள்கள் வழங்கினர்.
பாளையங்கோட்டை என்ஜி.ஓ காலனியை சேர்ந்த கிறிஸ்தவ வாலிபர்கள் இணைந்து , தங்களுக்குள் பணம் பிரித்து ஏழை எளியவர்களுககு கொரானா நிதி உதவி செய்தனர். இந்த நிதியை கொண்டு என்.ஜி.ஓ காலனி,ரெட்டியார் பட்டி , தமிழன்நகர், தியாகராஜ நகர் உள்பட பல பகுதியில் நிதிதஉதவி செய்தனர் . அதன் ஒரு பகுதியாக செய்துங்கநல்லூர் அருகே உள்ள அய்யானர்குளம் பட்டியில் உள்ள 50 குடும்பங்களுககு நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிதியை எபநேசர், அல்டினோ லூயிஸ், கௌரவ் , சின்னதுரை உள்பட பலர் வழங்கினர்.


