தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவனுக்கு தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் இன்று (மே 6) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் மாநிலதலைவர் மு.மருதப்பெருமாள், பொதுச்செயலாளர் ஜெயராஜ், மாவட்ட காது கேளாதோர் வாய்பேச முடியாத முன்னேற்ற நல்வாழ்வுசங்கத்தின் தலைவர் பேச்சிமுத்து மற்றும் சங்க நிர்வாகிகள் அமைச்சரை நேரில் சந்தித்து சென்று பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


