தமிழக அரசு மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டத்திலும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக பல்வேறு ஆளுமைகளைக் கொண்டு திருக்குறள் திருப்பணிகள் மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு வழங்க உத்தரவிட்டது. இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி வட்டத்தில் இரண்டாவது கூட்டம் தூத்துக்குடி முடிவைத்தானந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குநர் வ. சுந்தர் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வாகைகுளம் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ராஜதுரை , முடிவைத்தானந்தர் இந்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மாரிமுத்து . திருக்குறள் திருப்பணிகள் கண்காணிப்புக் குழு உறுப்பினர் முனைவர் கா.சரவண குமார் ஆகியோர் கலந்துகொண்டு திருக்குறள் குறித்து மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு வகுப்பினை எடுத்தார்கள். விழாவில் வந்திருந்தவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் எலியாஸ் வரவேற்றார். நிகழ்வில் திருக்குறள் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டு மாணவ மாணவியருக்கு திருக்குறள் நூல் பரிசாக வழங்கப்பட்டன. பள்ளியின் பட்டதாரி தமிழாசிரியர் செந்தூர் செல்வி நன்றி கூறினார். பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியர் மகஜா தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட திருக்குறள் திருப்பணிகள் கண்காணிப்பு குழு உறுப்பினர் முனைவர் கா.சரவணகுமார் செய்திருந்தார்.


