கொங்கராயகுறிச்சி கிளை தபால் நிலையத்தில் துணை அஞ்சல் அலுவலராக பணியாற்றியவர் சந்திரன். இவர் கடந்த 3.01.1983 ஆம் ஆண்டு இந்த தபால் நிலையத்தில் அஞ்சல் அதிகாரியாக பணிக்கு சேர்ந்தவர். தொடர்ந்து 40 வருடங்களாக பணியாற்றி இவர் தற்போது பணி ஓய்வு பெற்றார். இவருக்கு தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகத்தில் கோட்ட கண்காணிப்பளார் பொன்னையா நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்.
கொங்கராயகுறிச்சி கிளை தபால் நிலையத்தில் நடந்த பிரிவு உபச்சார விழாவில் ஏரளாமனவர்கள் கலந்துகொண்டனர். கவுன்சிலர் அப்துல் கரீம், ஜமாத் சார்பில் தலைவர் ரகுமத்துல்லா, செயலாளர் அப்பாஸ் காசியார், முன்னாள் தலைவர் அப்துல் காதர், அப்துல் சலாம், சாகீர் உசேன், கப்பல் சாகுல் அமீது, கமல் பாஷா, பள்ளிவாசல் இமாம் அபுபக்கர் சித்தி, மோதியார் ஷ்யாம் தப்ரிஸ், ஸ்ரீவைகுண்டம் அஞ்சல் ஆய்வாளர் கமல்ராஜ் குமார்,மெயில் ஓவர்சீலர் பரமசிவம், , ஆழ்வார்கற்குளம் கிளை அஞ்சல் அலுவலர் பால முருகன், தபால் காரர்கள் அப்ருத் ஜேம்ஸ், விஷ்வா, சாமுவேல் ஜெகன், அவினாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து 40 வருடம் பணியாற்றிய சந்திரனை பெதுமக்கள் மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைத்தனர்.


