வல்லநாடு அருகே கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள தனியார் செங்கல் சூளை நுழைவாயில் அருகே ஒரு ஆண் சடலம் கிடைப்பதாக முறப்பநாடு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு சடலத்தை பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இறந்த கிடந்த நபருக்கு சுமார் 60 வயது இருக்கும். வேட்டி சட்டை அணிந்திருந்தார். அவர் எந்த ஊரை சேர்ந்தவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்


