துாத்துக்குடி புதிய விமான நிலையத்திற்கு, குரூஸ் பர்னாந்து பெயரை சூட்ட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் தந்த கோமகன் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து பெயரை, தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர், காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே. பெருமாள் சாமி தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவர் மத்திய மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்வேன் என்று உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் அகில இந்திய ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, மாநகரச் செயலாளர் இக்னேஷ்யஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட், வார்டு தலைவர்கள் சேவியர் மிசியர்,சுரேஷ் குமார், சேகர்,ஷேக்ஸ்பியர், மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், முத்து, கிரிதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


