தூத்துக்குடியில் மாவட்ட மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்கம் (சிஐடியூ) சார்பாக சுதந்திர போராட்ட வீரர் தியாகி விஸ்வநாத தாஸ் 84வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி தூத்துக்குடி சிதம்பர நகரில் அவரது உருவப்படத்துக்கு சங்கத்தின் தலைவர் டென்சிங், கௌரவத் தலைவர் கே. சதாசிவம், செயலாளர் எஸ் நாகராஜ், பொருளாளர் கே வேல்முருகன், துணைத் தலைவர் கே முருகன், முன்னணி நிர்வாகி முத்து சேகர், காளியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் எம்எஸ் முத்து உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்


