ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடிபூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகை ரூ.3,000க்கு விற்பனையானது.
புத்தாண்டை முன்னிட்டு கோவில், தேவாலயங்களில் பூக்களை வைத்து வழிபடுவது வழக்கம். மேலும் வீடுகள், அலுவலகங்களில் கடவுள் படங்கள், முன்னோர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
அதன்படி மல்லி பூ ஒரு கிலோ ரூ.3000, பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.2000, சென்ட் பூ ஒரு கிலோ ரூ.600, வெள்ளை செவ்வந்திபூ ஒரு கிலோ ரூ.400, செவ்வரளி ரூ.500, பெங்களூர் ரோஸ் ரூ.20, பூக்கள் கொண்ட கட்டு ரூ.400, அரளிப்பூ ஒரு கிலோ ரூ.500 பட்டன் ரோஸ் ஒரு கிலோ ரூபாய் 300 விற்பனை ஆகிறது. பூக்களின் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்


