ஆழ்வார்திருநகரியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தாமிரபரணி ஆற்றுக்கரையில் பனைவிதைகள் நட்டனர்.
ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் தாமிரபரணி ஆற்றுக்கரையில் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை கோமதி ஆனந்தம் தலைமை வகித்தார். ஆழ்வார்திருநகரி பேரூராட்சி செயல் அலுவலர் காயத்ரி முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சிவ சங்கரராமன் மற்றும் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆற்றங்கரையில் பனை விதைகளை நட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கணேஷ், திருவேங்கடத்தான் மற்றும் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


