தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் தாளமுத்து நகர் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, தாளமுத்துநகர் பஜார் பகுதியில் போலீசாரை கண்டதும் இளைஞர் ஒருவர் தப்பியோட முயன்றாராம்.
அவரை பிடித்து விசாரித்தபோது, தாளமுத்துநகர் கொத்தனார் காலனியைச் சேர்ந்த ராஜ்குமார் (32) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த சுமார் 1.2 கிலோ கஞ்சா பொட்டலங்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


