தூத்துக்குடியில் இன்று சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனையை புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள திருமண்டல நிர்வாக மேலாளர் தேவா காபிரியேல் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் புதிய நிர்வாக மேலாளராக தேவா காபிரியேல் ஜெயராஜனை திருமண்டல நிர்வாகியும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியுமான ஜோதிமணி நியமனம் செய்தார். அதன் அடிப்படையில் இன்று தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து திருமண்டல நிர்வாக மேலாளர் தேவா காபிரியேல் ஜெப ராஜன் திருமண்டல நிர்வாகத்திற்கு உட்பட்ட அனைத்து துறைகளையும் ஆய்வு செய்தார். இதில் திருமண்டல நிதி நிர்வாகி அன்பர்தாஸ் உடன் இருந்தார். பின்னர் ஸ்டேட் பாங்க் காலனி எழில்நகரில் உள்ள சி.எஸ்.ஐ. தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல மிஷன் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


