தூத்துக்குடியில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சார்பில் ரூ.10 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
இதுகுறித்து தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் பகுதியை சேர்ந்த சரவணன், ஜெயக்குமார் ட்ரான்ஸ்போர்ட்ஸ் -இல் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வந்துள்ளார் இவருக்கு இந்நிறுவனத்தின் சார்பாக இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் ரூ.559 செலுத்தி விபத்து காப்பீடு செய்திருந்தனர். இந்நிலையில், அவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது வாரிசான அவரது மனைவி ஜெய ராணிக்கு தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா விபத்து காப்பீட்டுத் தொகையான ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
மேலும், தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கூறுகையில், இந்திய அஞ்சல்துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் ஆண்டிற்கு ரூ.549 மற்றும் ரூ.799 செலுத்தி அஞ்சல் துறை மூலம் எளிய மக்கள் பயன் பெறும் வகையில் ரூ.10 மற்றும் 15 லட்சத்திற்கான விபத்துக் காப்பீடு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில், ஜெயக்குமார் ட்ரான்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் வி.வரதராஜ், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் அஞ்சல் துறையை சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.


