கருங்குளம் – செய்துங்கநல்லூர் – கொங்கராயகுறிச்சிக்கு-புதிய மின் மாற்றி அமைக்கப்படும்என செய்துங்கநல்லூரில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மின்வாரியமேற்பார்வைபொறியாளர் தகவல் தெரிவித்தார். இதுபற்றிய விவரம் வருமாறு.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக செய்துங்கநல்லூர் இளநிலை மின் பொறியாளர் அலுவலத்தில் வைத்து செய்துங்கநல்லூர் மின் நுகர்வோர் கூட்டம் நடந்தது. தூத்துக்குடி மின்சார மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் ராம்குமார், ஸ்ரீவைகுண்டம் உதவி செயற்பொறியாளர் உஷாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செய்துங்கநல்லூர் உதவி பொறியாளர் சுரேஷ்குமார் வரவேற்று பேசினார். அதன்பின் மக்களிடம் குறைகள் கேட்கப்பட்டது. கருங்குளத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் மின்சாரம் தட்டுபாடு அதிகமாக இருப்பதால், அங்கு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும். கொங்கராயகுறிச்சியில் குடிதண்ணீர் பிரச்சனை தீர்க்கவு-ம் கூடுதல் டிரான்ஸ்பார்மர் வேண்டும், செய்துங்கநல்லூரில் மின் தட்டுபாடை சீர் செய்ய கூடுதல் மின்மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை உடனே நிறைவேற்றி தருவதாக மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் உறுதியளித்தார். அதோடு மட்டுமல்லாமல் அதற்கான ஆலோசனையை மின் வாரிய அதிகாரிகளுடன் கலந்து நடவடிக்கை எடுத்தார்.
மின் நுகர்வோர், மின்சார கட்டணத்தில் ஏற்படும் பிரச்னனையை யாரிடம் புகார் செய்வது. உள்பட பல் வேறு பிரச்சனை பொதுமக்கள் மத்தியில் அலசப்பட்டது. செய்துங்கநல்லூரில் நிரந்தரமாக கட்டிடம் கட்டி தரவும் அதற்காக நிலங்களை தேர்வு செய்வது சம்பந்தமாகவும ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், கருங்குளம் பஞ்சாயத்து தலைவர் உதய சங்கர், கொங்கராயகுறிச்சி சமூக சேவகர் அப்துல் சலாம், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


