துாத்துக்குடி, குரூஸ்புரம், துாய ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஸ்பிக்நகர் இன்னர்வீல் கிளப் சார்பில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
துாத்துக்குடி ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்கள் தற்போதுள்ள நவீன கல்வி வசதியை பெறும் வகையில் மாணவிகளின் கல்வி வசதிக்காக ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் கிளாஸ் ரூம் இன்னர் வீல் கிளப் சார்பில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
எளிய முறையில் முறையில் கல்வி பயில புரோஜக்டர், ஸ்கிரின், ஸ்டண்ட் உள்ளிட்ட கருவிகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை ஜோஸ்பின், ஸ்பிக் நகர் இன்னர்வீல் கிளப் தலைவி செல்வி பாலசுப்பிரமணியம், பி.டி.சி. வெயிலா ராஜா, துணை செயலாளர் லீனா மகிமை, துணைத் தலைவர் ஜூடி ஐவன் குமார், எடிட்டர் சிதம்பர லட்சுமி, ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி பசுமைப்படை மூலம் இன்னர்வீல் கிளப் நிர்வாகிகள் மரக்கன்றுகள் நட்டனர்.


