செய்துங்கநல்லூரை சேர்ந்த சமூக சேவகர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி. இவர் பா.ம.கவின் மாநில தலைவராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சரிபத்துள் பாத்திமா, செய்துங்கநல்லூர் சீராஜ்தீன் மகள் சாகுல் பிரகான் ஆகியோர் திருமணம் பாளை ஹைகிரவுண்ட் எம்.ஓ.சி மகாலில் நடந்தது. இந்த திருமணத்திற்கு பா.ம.க மாநில தலைவர் அன்புமணி தலைமை வகித்து மணமக்களை வாழ்த்தி பேசினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள்மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, பொருளாளர் திலகபாமா, முன்னாள் மாநில் அமைச்சர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, பாளையாங்கோட்டை எம்.எல்.ஏ அப்துல் வகாப், பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் கவிஞர் சுரேஷ் தேவர், வழக்கறிஞர் கே.வி. மகாராஜன், கோதர், மும்பை கபாலி மணி, செய்துங்கநல்லூர் இன்ஸ் பெக்டர் பத்பநாப பிள்ளை, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


