பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய 126 வது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு நடந்த அசன விருந்தில் திரளானோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய 126 வது பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு மாலை 4 மணிக்கு அசன விருந்து நிகழ்ச்சி நடந்தது. சேகரகுரு. டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் திரளான பேர்களுக்கு அசன விருந்து வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை பிள்ளையன்மனை சேகர தலைவர் வெல்ற்றன் ஜோசப், சேகர குரு டேனியல் ஆல்பிரட் , தூய பரமேறுதலின் ஆலய அசன கமிட்டி தலைவர் ராபின்சன், உப தலைவர் ஞானையா, செயலாளர் செல்வராஜ், துணைச் செயலாளர் பொன்செல்வன், பொருளாளர் கோல்டன் பிரபு, இணை பொருளாளர் ஜோஷ்வா சாமுவேல், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஷம்மா அகஸ்டின், திலகர், சேகர செயலர் அதிசயம், பொருளாளர் ஆபிரகாம் பாஸ்கரன், எல்சிஎப் செயலர் ஞானசிங், சபை ஊழியர்கள் டேனியல் ஆசீர்வாதம், டென்சிங், கன்வென்ஷன் பொறுப்பாளர் எட்வின் மற்றும் அசன கமிட்டி உறுப்பினர்கள், சேகர கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் செய்துள்ளனர்.


