கருங்குளம் வட்டாரம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிகளுக்கான ஒருநாள் புத்தாக்க பயிற்சி சுந்தர் மினி மஹாலில் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ரா. கோமதி தலைமையில் நடைபெற்றது. பயிற்சியில் திட்டத்தின் நோக்கங்கள் பணிகள் போசிஷன் 2.0 திட்டம் இணை உணவு வளர்ச்சி கண்காணிப்பு முன்பருவக் கல்வி சமுதாய பங்கேற்பின் பங்கு திட்டத்தின் செயல்படுத்தப்படும் சுகாதாரப்பணிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பங்கு ஆகியன குறித்து விளக்கி கூறப்பட்டது. பயிற்சி ஏற்பாடுகளை வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சோ சுருதி தலைமையில் மேற்பார்வையாளர்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர் வட்டார திட்ட உதவியாளர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் செய்திருந்தனர்


