தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திரபோராட்டத்தில் பங்குபெற்று, அறியப்படாத தியாகிகளை கண்டறிந்து ஆவணப்படம் எடுக்க உதவியவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டுச் சான்றுகளை வழங்கினார்.
ஆசாதிகா அம்ரித் மஹோத்சவ் முயற்சியின் ஒரு பகுதியாக, மாவட்ட டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்குவதற்காக, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமானது,
சுதந்திரப் போராட்டத்திற்காகவும், அதில் ஒரு அங்கமாக உருவான முக்கிய நிகழ்வுகளுக்காகவும், உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கண்டறிந்து ஆவணப் படுத்தும் முயற்சியை மேற்கொண்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில முக்கிய வரலாற்றாசிரியர்களைத் தேடி, இரண்டு முக்கியமான பங்களிப்பாளர்களை அடையாளம் கண்டோம். அவர்கள் வழங்கிய கதைகள் மற்றும் ஆதாரங்களைக்கேட்டு, 26 முக்கிய நபர்களின் பட்டியலையும் சிலநிகழ்வுகளை பற்றிய விரிவான விளக்கங்கள் பெறப்பட்டன. பின்னர், தொடர்புடைய இடங்கள் மற்றும் தொல்பொருட்களை புகைப்படம் எடுக்கத் தொடங்கினோம்.
இதற்காக, ஒரு சில புகைப்படக் கலைஞர்கள் தங்கள் குழுவுடன் ஈடுபட்டிருந்தனர். பின்னர், அப்பகுதி மக்களின் உதவியுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை கண்டறிந்து, அவற்றை புகைப்படம் எடுத்தோம்.
திட்டத்தில் பங்களிக்க ஆர்வமுள்ள பல்வேறு பள்ளி ஆசிரியர்களிடம் உதவி கேட்டோம். தயாரிக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பற்றி அவர்கள் பேசும் ஆடியோக்கள் மற்றும் வீடியோக்களை நாங்கள் பதிவு செய்தோம். அசோகா பல்கலைக் கழகத்தில் உள்ள தன்னார்வலர்களின் உதவியுடன் நாங்கள் எழுதும் தமிழ் மற்றும் ஆங்கில ஆவணங்களை (விவரங்களை) மொழி பெயர்த்து துணை ஆவணங்களாக தயார் செய்து, Collector Thoothukudi என்ற Youtube channel லும், twitter/face book போன்ற வலையதளத்திலும் வெளியிட்டுள்ளோம். . இந்த பணியில் ஈடுபட்ட வரலாற்றாசிரியர்களான முத்தாலங்குறிச்சி காமராசு மற்றும் நெய்தல் யூ அண்டோ, தயாரிக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பற்றி பேசும் ஆடியோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்த சரவணன் மற்றும் அபிஷ் விக்னேஷ் மற்றும் பின்னணி குரல் கொடுத்த சென் சேவியர்ஸ் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களான நெய்தல் யூ. அண்டோ, அந்தோணி எட்வர்ட் யூஜின், ஜோசப் ஸ்டாலின் மனோகரன், பாக்கிய எழில்ராஜ் மற்றும் காமராஜ் கல்லூரி உதவி விரிவுரையாளர் அபிஷ் விக்னேஷ் , அசோகா பல்கலைக் கழகத்தில் மொழி பெயர்த்து துணை ஆவணங்களாக தயார் செய்த மாணவர்களுக்கும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் பாராட்டுச் சான்றுகளை வழங்கி வாழ்த்தினார்.
பின்னர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய பொருநை ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகங்களும் அறிக்கைகளும் என்ற நூல் அறிமுக விழா மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சிதலைவர் செந்தில் குமார் நூலை அறிமுகம் செய்தார்.ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் தங்கள் ஊரில் தாமிரபரணி கரையில் மரம் நட மாவட்ட ஆட்சித் தலைவர் வருகை தரவேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.


