கயத்தாறு அருகே பைக் மீது கார் மோதியதில் பெட்ரோல் பங்க் மேலாளர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள காப்பு லிங்கம்பட்டி கிராமம் நடுத்தெருவில் வசிப்பவர் செல்லையா. இவருடைடைய மகன் சங்கிலி பாண்டி (29). இவர் கடம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் இன்று காலை 9 மணி அளவில் தனது வீட்டில் இருந்து கடம்பூருக்கு தனது மோட்டார் பேக்கில் சென்று கொண்டிருந்தார். கடம்பூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த ஒரு கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கயத்தார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதா தேவி சம்பவ இடத்திற்கு சென்று இவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து அந்த கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


