தூத்துக்குடியில் கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி கால்டுவெல் காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் மனைவி ஜெமிலா (40). இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் இருந்த நிலையில் வடிவேல் என்பவரை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். மேலும் முதல் கணவருக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்துள்ளது.
நேற்று இரவில் கணவன் – மனைவி இடையே குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை சுமார் 5 மணியளவில் ஜெமிலா அவரது அறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


