ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடி மேலூரைச் சேர்ந்தவர் பொன்கிருஷ்ணன் கலா தம்பதியினர். இவர்களுக்கு பார்வதிபிரியா என்ற மகளும், பொன்சுரேஷ் என்ற மகளும் உள்ளனர்.
பார்வதி பிரியாவுக்கு ரயில்வேயில் பணிபுரியும் காருகுறிச்சி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் நேற்றைய தினம் திருமணம் நடந்தது.
புதுக்குடி மேலூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. இதற்காக மேளதாளங்கள் முழங்க மணமகன் மணிகண்டன் அழைத்து வரப்பட்டார்.
அதைத் தொடர்ந்து மணமகள் பார்வதி பிரியா கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது வித்யாசமான முறையில் வந்த மணமகளை திருமண விழாவிற்கு வருகை தந்த பொதுமக்கள் பார்த்து அசந்தனர்.
மணமகள் பார்வதி பிரியாவின் சகோதரர் பொன்சுரேஷ் தனது சகோதரியின் கால் தரையில் படாமல் கோவிலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தார். அதை நடத்தினார். அதற்காக மேளதாளங்கள் முழங்க தனது வீட்டில் இருந்து கோவில் வரை தனது சகோதரியை இருகையிலும் தூக்கிக் கொண்டு கோவிலுக்கு வந்தடைந்தார்.
அப்போது மணமகன் இவர்களின் செயலை கண்டு ரசித்தார். தொடர்ந்து அங்கு திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். இப்படி ஒரு சகோதரத்துவத்தை எண்ணி மகிழ்ந்தனர்.
அதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.


