தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ். அபிராமிநாதன் தலைமையில் நடந்தது. திமுக வடக்கு மாவட்ட செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் எம்.பிரபு. அந்தோணி, கண்ணன், பழனி குமார், நாகராஜன், அருணா தேவி, தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் டி என் அண்ணாதுரை, வைதேகி, ஸ்ரீதர், அருணா, ஹரிகரன், வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரத்த தானம் செய்தனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இரத்ததான முகாம் ஏற்பாடுகளை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் சாந்தி மற்றும் செவிலியர்கள் செய்திருந்தனர்.