நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்தார். என்.சி.சி. அலுவலர் சுஜித் செல்வசுந்தர் வரவேற்றார். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனத்துறையின் இயக்குனரும், திருமுறையூர் சேகர குருவானவருமான ஜாண் சாமுவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு என்.சி.சி. மாணவர்கள் இயற்கையை காப்பது மற்றும் மரக்கன்றுகளை வளர்ப்பதன் அவசியம் குறித்து பேசினார்.
தொடர்ந்து என்.சி.சி. தரைப்படை பிரிவு 100 மாணவர்களுக்கு ஒரு வீரர், ஒரு மரம் என்ற செயல் திட்டத்தின் அடிப்படையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.நிகழ்ச்சியில் பள்ளி விவசாய பிரிவு தொழிற்கல்வி ஆசிரியர் ஜெய்சன் பாபு மற்றும் தேசிய பசுமை படை பொறுப்பாளர் அம்புரோஸ் சுகிர்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாளாளர் சுதாகர் ஆலோசனையின் பேரில், பள்ளி தலைமை ஆசிரியர் குணசீலராஜ், என்.சி.சி. அலுவலர் சுஜித் செல்வசுந்தர், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் செய்திருந்தனர்.