தூத்துக்குடியில் பள்ளி ஆண்டு விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடியில் டி.எம்.என்.எஸ். டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசுகையில், தூத்துக்குடி மாநகரை தூய்மையாக பரமாரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்று பேசினார். மேலும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு அவர் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரியம்மாள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


