தூத்துக்குடிஹோலிகிராஸ் பள்ளியில் 269 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை அமைச்சா் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி ஹோலிகிராஸ் பள்ளி 269 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் வழங்கி பேசுகையில் பெண்களுக்கு கல்வி முக்கியமானதாகும். வளர்ந்துவரும் விஞ்ஞானத்தில் செல்போன் தவிர்க்க முடியாதது தான் என்றாலும் குறைந்த நேரத்தில் அதில் ஆக்கபூர்வமான விசயங்களை எடுத்து கொள்ள வேண்டும். அதன் பின் படிப்பில் அதிக நேரம் செலவிட வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் அருள்சகோதரி ஞானம்மாள், திமுக மாநகரச் செயலா் எஸ்.ஆா்.ஆனந்த சேகரன், பெருமாள் கோவில் அறங்காவல் குழு தலைவா் செந்தில்குமாா், ஆசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா்.


