சாத்தான்குளம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் அரசு பிசியோதெரபி மருத்துவர் படுகாயமடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேகீழ பனைக்குளம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் தாமஸ் ஜான்சன் (25). இவர் முதலூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்நில் பிசியோதெரபி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பணி முடிந்து மாலை வீடு திரும்பிபோது இளமால்குளம் விலக்கு ஆலமர பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது எதிரே மேல நொச்சிகுளம் ஐயாக்குட்டி மகன் செல்வம் ஒட்டி வந்த பைக் நேருக்குநேராக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பிசியோதெரபி தாமஸ் ஜான்சன் ஆபத்தான நிலையில் திருநெல்வேலி மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் அருள்சாம்ராஜ் வழக்குபதிவுசெய்து செல்வத்தை தேடி வருகிறார்.


