திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வளர்பிறை முகூர்த்தத்தையொட்டி நேற்று ஏராளமான திருமணங்கள் நடந்தன.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. நேற்று வளர்பிறை முகூர்த்தத்தையொட்டி ஏராளமான திருமணங்கள் நடந்தன. அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.


