தூத்துக்குடி பக்கிள் ஓடையில் தவறி விழுந்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி இரண்டாம் கேட் பக்கிள் ஓடையில், ஒருவர் தவறி விழுந்து கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய உதவி மாவட்ட அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையில் பணியாளர்கள் விரைந்து அங்கு கிடந்த வாலிபரை மீட்டனர். விசாரணையில் அவர் சுந்தர ராமபுரத்தைச் சேர்ந்த மருதவேல் மகன் ஜெகன் (23) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


