உலக சமாதானத்தை வலியுறுத்தி தூத்துக்குடி பனிமய அன்னை பேராலய வளாகத்தில் நாளை (மே 31) ஜெபமாலை பேரணி நடக்கிறது.
உலக சமாதானத்தை வலியுறுத்தி தூத்துக்குடி பனிமய அன்னை பேராலய வளாகத்தில் நாளை (மே 31) ஜெபமாலை பேரணி நடக்கிறது. பேரணி பேராலய வளாகத்தில் தொடங்கி, தங்கத்தேர் பவனியாக வரும் வீதிகள் வழியாக வந்து, பனிமய அன்னை பேராலயத்தை வந்தடைந்தவுடன் திவ்விய நற்கருணை ஆசீருடன் நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஸ்டார்வின், மற்றும் இறை மக்கள் செய்து வருகின்றனர்.


