இன்றைய தினமலரில் நான் எழுதிய செல்வங்களை அள்ளித்தரும் சித்தர் தரிசனம் நூலின் விமர்சனம் வந்துள்ளது. வெளியிட்ட நிர்வாகத்துக்கு, விமர்சனம் எழுதிய செல்லப்பா அய்யா அவர்களுக்கும் நன்றி . நெல்லை புத்த கண்காட்சியில் இந்த நூல் கிடைக்கும். அனைவரும் வாங்கி படித்து மகிழுங்கள். அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு
படிக்கலாம் வாங்க!
செல்வங்களை அள்ளித்தரும் சித்தர் தரிசனம்
ஆசிரியர் : முத்தாலங்குறிச்சி காமராசு
வெளியீடு : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிட்டெட்
டோல்ப்ரீ: 1800 425 7700
பக்கம்: 128 விலை : ரூ.180
: 75500 09565
செல்வங்களை அள்ளித்தரும் சித்தர் தரிசனம்
சித்தர்கள் என்றால் யார் யார் உங்கள் நினைவுக்கு வருவார்கள். போகர் முதலில் வருவார்… ஏனெனில், இவர் பழநி முருகன் நவபாஷாண சிலையை அர்ப்பணித் தவர்.. இவரை தமிழ் மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். இன்னொரு வர் கொங்கணர்… ‘கொக் கென்று நினைத்தாயா கொங்கணவா’ என்ற சொற்றொடர் இவரால் தான் வந்தது. அடுத்தவர், நெல்லை மண்ணின் தாமி ரபரணி கரைக்கு வந்து, சிவனையே ‘நாறும்பூ நாதா’ என அழைத்து, சாய வைத்த கருவூர் சித்தராவார். இப்படி பதினெட்டு பேர், பதி னெண் சித்தர்கள் என்ற சிறப்புப் பெயருடன் திகழ்கிறார்கள். நெல்லை மண்ணுக்கு வந்த அகத்தியப்பெருமானும் கூட சித்தர்களில் முதன்மைபெற்ற சித்தர் தான்.
புகழ் பெற்ற இவர்க ளைத் தவிர, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன் னும் பல சித்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் இங்கே நினைவிடங்களே இருக்கிறது. அவற்றைக் கோவிலாக போற்றுகின் றனர் மக்கள். இப்படி தேடிப்பிடித்த சித்தர் களின் வரலாறை, 16 தலைப்புகளில் அழகுபட எழுதியுள்ளார், நூல் ஆசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு.
பஞ்சாயத்து தலைவராக இருந்து சித்தர் அந்தஸ்துக்கு உயர்ந்த ஏரல் சேர்மன் அருணாசல சுவா மிகள், விபத்தா அது உன் வாழ்விலேயே இனி இல்லை என வாகனம் ஓட்டும் அனைவருக்கும் அருள்தர காத்திருக்கும் இலத்தூர் சித்தர், இமய மலையில் புகழ் பெற்ற பாபாஜி பற்றி கேள்விப் பட்டிருப்பீர்களே…அவர்களது பக்தர்களே வந்து வணங்கும் கூனியூர் முத்துராமலிங்கம் சுவாமி, அம்பாசமுத்திரம் கோடரங்குளம் தாமிரபரணி கரையில், மண்ணையே மருந்தாக்கி நோய்களைக் குணப்படுத்தும் ராமலிங்கம் சுவாமிகள், குளத்து நீரை நெய்யாக மாற்றிய கோடகநல்லூர் சித்தர் , அந்தரத்தில் தியானம் செய்த பிச்சி சித்தர் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அனைவரது வரலாறும் மெய் சிலிர்க்க வைப்பது மட்டுமினறி இப்போதே இவர்களைத் தரிசித்து விட வேண்டு என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது.
அரசுக்கு ஒரு வேண்டுகோள். கும்பகோணத்தை சுற்றியுள்ள நவக்கிரக தலங்கள், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத் திலுள்ள நவ கைலாயங் கள், நவதிருப்பதிகளுக்கு சுற்றுலா செல்வது போல், இந்த 16 சித்தர் கோவில்க ளுக்கும் செல்லும் வகை யில் சுற்றுலா வாகனங் கள் ஏற்பாடு செய்தால், இந்த மூன்று மாவட்டங் களும் சுற்றுலா துறை யில் மேலும் வளரும். அத்துடன், சித்தர்களின் அருளும் அனைவருக்கும் கிடைக்கும்.
தி.செல்லப்பா


