தூத்துக்குடியில் அற்புதம் மருத்துவமனை மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய அவசர உயிர்காக்கும் சிகிச்சை பயிற்சி நடைபெற்றது.
தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டில் அற்புதம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது. திருநெல்வேலி காவேரி மருத்துவமனையுடன் இணைந்து செவிலியர்களுக்கு உயிர் காக்கும் அவசர முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், விபத்தில் சிக்கியவர்கள், மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர்காக்கும் அவசர முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
அற்புதம் மருத்துவமனை முதன்மை நிர்வாக அதிகாரி ஜெபன் தலைமை வகித்தார். இதில் காவேரி மருத்துவமனை மேலாளர் அப்துல் ரியாஸ், செவிலியர் கண்காணிப்பாளர் ஏஞ்சல் ரோஸ்லின், பயிற்சியாளர் நிதிஷ்குமார், வீரலெட்சுமி ஆகியோர் பயிற்சி அளித்தனர். கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் வீரா செய்திருந்தார்


