கடம்பூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகே ஆலந்தா பகுதியைச் சேர்ந்த பரமசிவன் மகன் முத்துக்குமார்(20). இவர் 16 வயது சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், கடம்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, முத்துக்குமாரை போக்சோசட்டத்தின் கீழ் கைது செய்தனர்


