தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் ஏரல் பாலம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் வழியாக செல்லும் தண்ணீரை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பார்வையிட்டார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் காரணமாக நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையான மழை பொழிவு ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத்,நேற்று ஏரல் பாலம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் வழியாக செல்லும் தண்ணீரை பார்வையிட்டார். தொடர்ந்து தண்ணீரின் அளவை கண்காணிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


