நம் பாரத நாடு ஆன்மீக வழியில் அருமையான பண்பாட்டு ரீதியினை கொண்டது. பல்வேறு புராதானமான நடைமுறைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. வைணவ முறையில் பின்பற்றி வரும் சம்பிரதாயம் நெல்லை&தூத்துக்குடி மாவட்டத்தினை பொறுத்தவரை மிக பிரம்மாதமாக பேசப்பட்டு வருகிறது. இராமானுஜர், பன்னிருஆழ்வார்கள் புகழ்ந்து பாடிய திருத்தலங்கள் பல இந்தப்பகுதியில் உள்ளது. மகாவிஷ்ணு பல்வேறு திருநாமத்தில் இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிகிறார். நமது நாட்டைப் பொறுத்தவரை ஆழ்வார்களால் பாடப்பட்ட தலங்கள் 108. இதில் திருப்பாற்கடலை தவிர 107 தலங்கள் பாரத நாட்டில்தான் உள்ளது. இதில் சோழநாட்டில் நாற்பது தலங்களும், தொண்டை நாட்டில் 22 தலங்களும் ஸ்ரீவிஷ்ணுவின் புகழ் பாடி வருகிறது. பாண்டியநாட்டில் 18 திருத்தலங்கள் அவர் வழி போற்றப்பட்டு வருகிறது. மலைநாட்டில் 13 தலங்கள் உள்ளது. வடநாட்டில் 11 தலங்கள் பெருமையுடன் காணப்படுகிறது. நடுநாட்டில் இரண்டு தலங்கள் விஷ்ணு பெருமானின் புகழை பெருமையுடன் போற்றி வருகிறது.
பாண்டியநாட்டில் அமைந்துள்ள திருப்பதிகளுக்கு ஒரு சிறப்பு உண்டு. ஆம். 18 திருத்தலங்களில் 9 தலங்கள் அருகருகே உள்ளது. https://arcus-www.amazon.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Tamil-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-ebook/dp/B0CP145W5C/ref=sr_1_24?qid=1701243711&refinements=p_27%3A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81&s=digital-text&sr=1-24


