தூத்துக்குடியில் வருகிற டிச.1ஆம் தேதி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை: முத்தமிழறிஞர், மூதறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாணவ – மாணவியர்கள் பங்கேற்கும் மாபெரும் வினாடி வினா நிகழ்ச்சி 01.12.2023 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி அளவில் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள மாணிக்கம் மஹாலில் நடைபெற இருக்கிறது.
கழக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிகருணாநிதி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தமிழக நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இவ்விழாவில் மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், வார்டு கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கழக தொண்டர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு இவ்வினாடி வினா நிகழ்ச்சியை சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


