தூத்துக்குடியில் பைக் விபத்தில் முன்னாள் தியேட்டர் உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் சங்கர் (58), இவர் தூத்துக்குடியில் சினிமா தியேட்டர் நடத்தி வந்தார். தற்போது ஒரு ஓட்டலில் பங்குதாரராக உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி விட்டு தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
டூவிபுரம் 3வது தெருவில் அவரு பைக் நிலை தருமாறி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


