1842 – நாஞ்சிங் உடன்படிக்கையின் படி முதலாம் அபின் போர் முடிவுக்கு வந்தது. ஹொங்கொங் ஐக்கிய இராச்சியத்தின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
1882 – தேர்வுத் துடுப்பாட்டத்தில் லண்டனில் ஆஸ்திரேலியா இந்திலாந்தை 7 ஓட்டங்களால் தோற்கடித்தது. பின்னர் பிரபலமான ஆஷஸ் தொடர் ஆரம்பமாக இது வழிவகுத்தது.
1885 – கோட்லீப் டாயிம்லர் மோட்டார்சைக்கிளுக்கான காப்புரிமம் பெற்றார்.
1898 – குட்இயர் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.
1907 – கியூபெக் பாலம் அமைக்கப்படும்போது இடிந்து வீழ்ந்ததில் 75 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1910 – ஜப்பானியர் கொரியாவின் பெயரை சோசென் (Chōsen) என மாற்றினர்.
1930 – சென் கில்டா தீவுகளின் கடைசி குடிமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ஸ்கொட்லாந்தின் ஏனைய பகுதிகளுக்குக் குடியேற்றப்பட்டார்கல்.
1944 – 60,000 சிலவாக்கியர் நாசிகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1944 – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜீ. ஜீ. பொன்னம்பலம் தலைமையில் அமைக்கப்பட்டது.
1949 – சோவியத் ஒன்றியம் ஜோ 1 என்ற தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை கசக்ஸ்தானில் நடத்தியது.
1966 – பீட்டில்ஸ் தமது கடைசி நிகழ்ச்சியை சான் பிரான்சிஸ்கோவில் நடத்தினர்.
1991 – சோவியத் உயர்பீடம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கியது.
1995 – முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரின் ஐரிஸ் மோனா என்ற கப்பலை விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர்.
1996 – நோர்வேயில் பயணிகள் விமானம் ஒன்று ஸ்பிட்ஸ்பேர்ஜன் என்ற தீவில் உள்ள மலையுடன் மோதியதில் 141 பேர் கொல்லப்பட்டனர்.
1997 – அல்ஜீரியாவில் ரைஸ் என்ற இடத்தில் 98 ஊர் மக்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
2005 – அமெரிக்காவின் லூசியானா முதல் புளோரிடா வரையான கரையோரப் பகுதிகளை சூறாவளி கத்ரீனா தாக்கியதில் 1,836 பேர் கொல்லப்பட்டு $115 பில்லியன் சேதம் ஏற்பட்டது.


