பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்கள் இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற பெற விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.50,000/- வழங்க தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ், இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.06.2026-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


