கோவில்பட்டியில் புத்தககண்காட்சி ஜூன்-9ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தலைவர் ரவிவர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறத்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜூன்-9ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
புத்தக கண்காட்சியில் சாகித்திய அகடாமி விருது பெற்ற புத்தகங்கள், வரலாறு, இலக்கியம், நாவல், டி.என்.பி.சி, போலீஸ், நீட், ஆர்ஆர்பி தேர்வுகளுக்கான புத்தகங்கள், உள்ளிட்ட 10 ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தக கண்காட்சியினை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பார்வையிட்டு தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை வாங்கி செல்லலாம். விற்பனையாகும் அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு என்று தெரிவித்துள்ளார்.


