மதுரை ஆதீனம் என்பது தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றாகும். மதுரை நகரில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.
மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் எனும் பாண்டிய மன்னன் சமண மதத்தைத் தழுவிய போது அவனது ஆட்சிக்குட்பட்ட பாண்டிய நாட்டின் பகுதி முழுவதும் சமண மதம் இருந்தது. சிவாலயங்களில் பூசைகள் நடைபெறவில்லை. மக்கள் மத்தியில் சிவ வழிபாடு வீழ்ச்சியுற்றுக் காணப்பட்டது. கூன்பாண்டியனின் மனைவி மங்கையர்க்கரசி சைவ சமயத்தில் பற்றுக் கொண்டவர். மந்திரி குலச்சிறையாரும் சிவபக்தர். அரசியும், மந்திரியும் கலந்தாலோசித்து திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்தனர். மதுரைக்கு விஜயம் செய்த திருஞானசம்பந்தரை மந்திரி குலச்சிறையார் இம்மடத்தில் தங்க வைத்தார். சமணர்கள் சம்பந்தரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்குத் தீ வைத்தனர். சம்பந்தர் மடத்தை விட்டு வெளியில் வந்து ஆலவாய் அண்ணலை தேவாரப்பதிகப் பாடலால் வேண்டினார். நெருப்பு வெப்பு நோயாக மாறிக் கூன்பாண்டியனை வாட்டியது. சமணர்கள் மன்னனின் நோயைக் குணப்படுத்த பல முயற்சி செய்தும் பலனில்லை. திருஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடி மன்னனின் வெப்பு நோயைக் குணப்படுத்தினார். சமணர்கள் மீண்டும் போட்டிக்கு அழைத்தனர். அனல்வாதம், புனல்வாதம் அனைத்திலும் ஞானசம்பந்தர் வென்று கூன்பாண்டியனின் கூன் முதுகு நோயை நீக்கி நின்றசீர் நெடுமாறனாக மாற்றினார்.
திருஞானசம்பந்தர் ஒழுங்குபடுத்திய மதுரை ஆதீனம் மடம், சைவ சித்தாத்தங்களை அடிப்படையாகக் கொண்ட திருமடம் ஆகும். இன்றுவரை 292 பேர் பீடாதிபதியாக இருந்துள்ளனர். 292 ஆவதாக அருணகிரிநாதர் இருந்தார். இவர் தனக்கு அடுத்ததாக 293 வது பீடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆவார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தில் மூத்த தம்பிரான் ஆக சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆன்மீக பணியிலும் பொது பணியிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
அரிகர தேசிக பரமாச்சாரியர் 25 மார்ச் 1954 அன்று திருநெல்வேலியில் புட்டாரத்தியம்மன் கோயில் தெருவில் காந்திமதிநாதன் பிள்ளை, ஜானகி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் பெயர் பகவதி இலெட்சுமணன். இவர் தனது கல்வியை கொல்லங்கிணறு கிராமத்தில் உள்ள அவரது தாய்மாமன் அவர்கள் அரவணைப்பில் பயின்றார். இவருடன் பிறந்தவர்கள் மூன்று பெயர் அண்ணன் வேலாயுதம், தங்கை சாந்தி, தம்பி ராதாகிருஷ்ணன் .
இவர் 1954 மார்ச் 25 அன்று இவர் தனது 21-வது அகவையில் குன்றக்குடி ஆதீனத்தில் ஆறுமுகத் தம்பிரானாகவும், 1976 முதல் 1980 வரை தருமபுரம் ஆதீனத்தில் நெல்லையப்பத் தம்பிரானாகவும் பணியாற்றினார். இவர் திருவாவடுதுறை ஆதினம் 23 வது குருமாக சன்னிதானம் கொண்ட பேரன்பு மூலமாக 1980 முதல் 2019 வரை திருவாவடுதுறை ஆதீனத்தில் சுந்தரமூர்த்தி தம்பிரானாகவும் 39 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். அதன் பின்னர் மதுரை ஆதீனத்தின் மடாதிபதி அருணகிரிநாதரால் 2019 சூன் 6 அன்று மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டார்.
292-வது மடாதிபதியாக இருந்த அருணகிரிநாதர் 2021 ஆகத்து 13 முக்தி அடைந்ததை அடுத்து, 2019 சூன் 19 முதல் ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக இருந்த இவர் 2021 ஆகஸ்டு 23 அன்று மதுரை ஆதினத்தின் புதிய மடாதிபதியாக, ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் என்ற பெயரில் முடிசூடப்பட்டார்.
இவர் பணியேற்ற பிறகு மதுரை ஆதினம் புது பொலிவு பெற்றது.
20 ஆண்டுகளாக முந்தைய ஆதீனம் நிறுத்தி வைத்திருந்த, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அன்றாடம் அதிகாலை நடைபெறும் முதல் பூஜையும், இரவு நடைபெறும் கடைசி பூஜையும் ஆதீன மடத்தின் சார்பில் நடத்த ஏற்பாடு செய்தார்.
ஆதீன மடத்தில் அன்றாடப் பூஜையின் போது மடத்திற்கு வரும் அடியவர்கள், வெளியூர் யாத்திரிகர்களுக்கு அன்னதானம் வழங்கும் பணியை மீண்டும் தொடர நடவடிக்கை எடுத்தார்.
வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மடத்தில் தேவார, திருவாசகம் நடத்தும் நிகழ்வுகளையும் தொடர உத்தரவிட்டுள்ளார்.
மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 5 கோவில்களில் குடமுழுக்கு பணிகளை நிறைவேற்றுவதற்கும், தினசரி பூஜைகளை தவறாமல் தொடர்வதற்கும் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை ஆதீன மடத்திற்கு மதுரை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடைகள், வீடுகள் உள்ளன. மேலும், தூத்துக்குடி, பழனி, திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. பல்லாயிரம் கோடி மதிப்புள்ள இந்த சொத்துக்கள் நெடுங்கால குத்தகை மற்றும் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளன. அதில், பெரும்பாலும் வாடகை தொகை கட்டப்படாமலும், குத்தகை இடங்களில் தனி நபர் ஆக்கிரமிப்பும் அதிகரித்து இருந்தன. மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களை முறையாக நிர்வகிப்பதில் முந்தைய ஆதீனம் தவறிய நிலையில், புதிய ஆதீனம் அவைகளை கணக்குப் பார்த்து மீட்டு பத்திரபடுத்தும் நடவடிக்கைகளை செய்யுமாறு உத்தரவிட்டார்.
சுவாமி பட்டமேற்பு பிறகு குறுகிய காலத்திலே புதிதாக செய்த வெள்ளி தேர் ஆத்மார்த்த பூஜா மூர்த்திக்கு சுவாமி பட்டமேற்பு பிறகு குறுகிய காலத்திலே ஸ்ரீ திருஞானசம்பந்தருக்கு செய்த வெள்ளி கவசம் என பல் வேறுநடவடிககை எடுத்தார். மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு மதுரையாதீனம் சார்பில் ஐம்பது ஆண்டு காலமாக நின்றிருந்த கட்டளையை மீண்டும் ஏற்படுத்தியது, ஆதீன குருபூசை விழாவை ஐந்து நாட்களாக கொண்டாடியது. ஒவ்வொரு நாட்களும் தலா இரண்டு அறிஞர் பெருமக்கள் என 10 பேருக்கு ரூ5000/- பொன் முடிப்பு விருது வழங்கி கௌரவப்படுத்தியது என மதுரை ஆதினத்தினை பெருமை படுத்தினார்.
விருதுகளை மங்கையர்க்கரசியார், வ .உ .சி, திருமுருக கிருபானந்த வாரியார், வள்ளலார், மருதுபாண்டியர், பாஸ்கர சேதுபதி பெயர்களில் ஏற்படுத்தி பொற்கிழி வழங்கியது, அதுவும் பதவியேற்ற ஒராண்டுக்குள் நிறைவேற்றியது அனைவரிடமும் பாராட்டு கிடைத்தது. சமய, சமுதாய பணிகளை செய்து வரும் இவர், மடத்தில் மங்கல வாத்தியங்கள் இசைக்க நாதஸ்வர கலைஞர்களை நியமனம் செய்தும், தமிழ் பாமாலை பாட ரூ 25,000/-மாதந்திர ஊதியத்தில் ஓதுவா மூர்த்திகளை நியமனம் செய்தது அனைவரின் மனதிலும் இடம்பிடிகக செய்தது. இவர்களது அருளாட்சியின் சிறப்பு ஓதுவா மூர்த்திகளுக்கு இந்தளவு ஊதியம் வேறு எங்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிட தக்கது. அதோடு மட்டுமல்லாமல் மாதந்திர திங்களிதழ் ஆதீன சார்பில் வெளியிடப்பட்டது.
இந்த வேளையில் தருமபுரம் ஆதினத்தின் பல்லககு சர்சை வந்த போது குரல் கொடுத்ததோடு, தனக்கு கொலை மிரட்டல் உள்ளது. எனவே நான் பிரதமரை சந்தித்து புகார் கொடுப்பேன் என பேசிய பேச்சு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக தமிழர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது. இவரது குரல் டெல்லியில் பாரத பிரதமர் இல்லத்திலும் கேட்டு விட்டது. எனவே பாரதபிரதமர் மதுரை ஆதீனம் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
1947ல் தென்னிந்தியாவில் தொன்மையான திருமடமான திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு மத்தியரசு அளித்த முக்கியத்துவம் போல இன்று பாரத பிரதமர் மோடி அவர்களால் மதுரை ஆதீனம் பெருமை பெற்றுவிட்டது. தமிழக வருகையில் தொடர் நிகழ்வுகளுக்கிடையிலும் மதுரையாதீனம் 293வது ஸ்ரீலஸ்ரீ குருமஹாசந்நிதானம் அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கி, குறிப்பிட்ட நேரங்களுக்கு மேலாக சந்தித்து உரையாடிய பாங்கு பிரபலமடைந்துள்ளது. பண்டைய காலங்களில் மாமன்னர்களும், மன்னர்களும் சைவ திருமடங்களை பாதுகாத்தும், பல நிவந்தகளையும் வழங்கியும் போற்றி வணங்கிய நிகழ்வுகளை நினைத்து பார்க்கும் வண்ணம் உள்ளது. பாரத பிரதமர் அவர்களின் செய்கை அனைவருக்கும் ஆச்சரியத்தினை அளித்துள்ளது. மிகுந்த நன்றியோடு சைவ உலகம், ஆதீன அடியவர்கள், சீடர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாரத பிரதமரை போற்றி மகிழ்கிறார்கள்.
ஆனால் இதற்கெல்லாம் வேறு ஒரு காரணமும் இருப்பதாக கூறுகிறார்கள். அது உண்மையாக இருக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.
காரணம் மதுரை ஆதீனத்துக்கு பாஜக அரசு நியமன எம்.பி பதவி கொடுக்க உள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.
அது உண்மையாக இருந்தால் திருநெல்வேலி மாவட்டம் , திருநெல்வேலி டவுண் புட்டாரத்தியம்மன் தெருவை பூர்வீகமாக கொண்ட மதுரை ஆதீனம் எம்.பி பதவி அடையதன் மூலம் தமிழகமும் , நமது நெல்லை பூமியும் பெருமையடையும்.
மதுரை ஆதினத்துக்கு எம்.பி பதவி கிடைக்குமா? பொறுத்திருந்து இருந்துதான் பார்க்கவேண்டும்.


