ஏரல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தூத்துக்குடி வாலிபர் பலியானார். தூத்துக்குடி ராஜ கோபால்நகரை சேர்ந்தவர் முருகன் மகன் அய்யப்பன் என்ற கண்ணன் (40), இவர், தனியார் நிறுவனத்தில் ஏடிஎம். மில் பணம் நிரப்புவராக வேலை பார்த்துவந்தார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை கண்ணன், நண்பர்கள் 4 பேருடன் சேர்த்து காரில் ஏரல் தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்துள்ளார். ஏரல் ஆற்றுப்பாலத்திற்கு மேல்புறம் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு கண்ணன் சென்றதால் திடீரென தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
தகவலறிந்த ஏரல் போலீசார்.ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படைவீரர்கள் உதவியுடன் தண்ணீரில் தேடி கண்ணன் உடலை நேற்று காலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கண்ணனின் மனைவி பரமேஸ்வரி ஏரல் போலீஸில் புகார் செய்தார். ஸ்ரீவைருண்டம் குற்றப்பிரிவு இனஸ்பெக்டர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


