செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் வளர்ந்து வரும் ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையத்தில் தற்போது நடைமேடை அமைத்தல், பிளாட்பார்ம் விரிவாக்கம் பணி போன்றவை நடந்து வருகிறது. இந்த ரயில் நிலையம் நாசரேத் , ஸ்ரீவைகுண்டம் போல கிராஸிங்க ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையத்தில் முன்பதிவு வசதி மூலம் டிக்கெட் பெறுபவர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இந்த ரயில் நிலையத்தினை தீடீர் ஆய்வு செய்ய மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா இரவு 10 மணிக்கு வருகை தந்தார். இவர் ரயில் நிலையத்தினை ஆய்வு செய்து விட்டு, நடைமேடை அமைக்கும் பணியை பார்வையிட்டு விட்டு வந்தார். அப்போது ஊர் பொதுமக்கள் சார்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தமிழ்நாடு தவ்கீத் ஜமாத்தை சேர்ந்த அப்துல், தி.மு.கவைசேர்ந்த அப்துல் காதர் மற்றும் பலர் அடங்கிய குழுவினர் அவரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நின்ற செல்வதில்லை. மேலும் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் வரை 11 ரயில் நிலையம் உள்ளது. அதில் அனைத்து நிலையங்களிலும் பாலக்காடு ரயில் நின்று செல்கிறது. தாதன்குளம் செய்துங்கநல்லூரில் மட்டும் நின்று செல்வதில்லை. தற்போது செய்துங்கநல்லூர் ரயில் நிலைய விரிவாக்கப்பணி, நடைமேடை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இந்த ரயில் நிலையம் கிராஸிங் நிலையம் மேலும் இந்த நிலையத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் மற்றும் பாளையங்கோட்டை செல்ல 15 கிலோ மீட்டர் கடக்க வேண்டும். மேலும் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் வருமானம் கடந்த காலத்தினை விட பெருகி உள்ளது. எனவே செய்துங்கநல்லூரில் பாலக்காடு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.
மனுவை பெற்றுக்கொண்ட விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். கோட்ட மேலாளர் இரவு 10 மணிக்கு மேல் தீடிர் விசிட் வந்த வேளையில் பொதுமக்கள் மனு கொடுக்க அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.


