தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்தவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் அருகே உள்ள புதூரைச் சேர்ந்த வள்ளிநாயகம் மகன் சிவராமன் (57). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் முடிவைத்தானேந்தல் சாலையில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு உள்ளது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக அவர் இறந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


