தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட 500பேருக்கு சேவா பாரதி இயக்கம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில், கனமழை வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து பணிக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கும் இந்து ஆட்டோ முன்னணி தொழிலாளர்கள் 300 பேருக்கும், இந்து முன்னணி இயக்கத்தைச் சார்ந்த 200 பேருக்கும் சேவா பாரதி இயக்கம் மூலம் மழை வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கவிதா திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார், கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.


