தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி செந்தில்ராஜை, செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமையில் பொதுமக்கள் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் பாலக்காடு ரயில் நின்றுசெல்லவில்லை. அது குறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய போது அப்போதைய ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேஷ் மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தினை கைவிட வைத்தார். அதன் பின் ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி ரயிலை செய்துங்கநல்லூரில் நிறுத்த ஏற்பாடு செய்யப்படும் என ஆட்சியர் கூறியிருந்தார். ஆனால் ரயில் இதுவரை நின்று செல்லவில்லை.
தற்போது திருச்செந்தூர் ரயில் வழித்தடம் மின் வழித்தடமாக மாற்ற ஏற்பாடு நடந்தது. அதற்கான ஆய்வுக்கு வந்த ரயில்வே உயர் அதிகாரிகளிடம் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. அவர்கள் ஆவண செய்வதாக வாக்களித்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவரை நேரில் சந்தித்தும் மனு கொடுத்தனர். மேலும் செய்துங்கநல்லூரில் நூலக கட்டிடத்தினை புதிதாக கட்டி தரவ«ண்டும். செய்துங்கநல்லூரில் விபத்து ஏற்படாமல் இருக்க சந்தை அருகிலும், புதிய பள்ளிவாசல் அருகிலும் பேரிகார்டு வைத்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சி தலைவர் ஆவண செய்வதாக வாக்களித்தார்.
அப்போது டி.ஆர்.ஓ கண்ணபிரான், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, செய்துங்கநல்லூரை சேர்ந்த அப்துல் உள்பட பலர் இருந்தனர்.


